ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம்
வட ஜப்பான் பகுதியில் மியாகோ அருகே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்
வடக்கு ஜப்பானின் பகுதியில் இன்று 5.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியாகோ நகருக்கு மேற்கே- தென்மேற்கே சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 79 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு இருப்பதால் நிலநடுக்க தாக்கம் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலோர பகுதிகள் எதற்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜப்பானில் நிலநடுக்கம் பொதுவாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் இந்த நிலநடுக்கத்தின் அமைவிடம் மற்றும் ஆழம் பெரிய ஆபத்துகளை ஏற்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |