போர் விமானங்கள் இருந்தும் இயக்க விமானிகள் இல்லாத 5 நாடுகள்
ஒவ்வொரு நாடும் அதன் பாதுகாப்பிற்கு ராணுவம் வைத்துள்ளது. நாட்டின் வலிமையை தீர்மானிக்கும் காரணிகளில் ராணுவ பலமாக முக்கியமான ஒன்றாக உள்ளது.
சமீபத்திய போர்கள், ராணுவத்தின் வான் படை மற்றும் வான் பரப்பை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
இதற்காக அனைத்து நாடுகளும் போர் விமானங்களை வைத்துள்ளது. ஆனால் சில நாடுகளில் போர் விமானங்கள் இருந்தும் அதை இயக்குவதற்கு விமானிகள் இல்லாமல் உள்ளது.
லிபியா
கடாபியின் ஆட்சிக்காலத்தில், மிக்-21, மிக்-23 மற்றும் மிராஜ் எஃப்1 போன்ற விமானங்களுடன் வலிமையான விமானப்படையை லிபியா கொண்டிருந்தது.
ஆனால் பல வருட உள்நாட்டுப் போர் அதன் உள்கட்டமைப்பை சிதைத்துவிட்டது. விமான தளங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டன. விமானிகள் ஓய்வு பெற்றனர் அல்லது தப்பி ஓடிவிட்டனர்.
பெரும்பாலான போர் விமானங்கள் இப்போது செயலற்ற நிலையில் உள்ளன.
ஆப்கானிஸ்தான்
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபோது, A-29 சூப்பர் டுகானோ மற்றும் Mi-17 ஹெலிகாப்டர்களை விட்டு சென்றனர்.
தற்போது ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாததால், அந்த போர் விமானங்களை அப்படியே வைத்துள்ளனர்.
ஏமன்
ஏமன் Su-22 மற்றும் MiG-29 ரக விமானங்களை தனது விமான படையில் வைத்திருந்தது. ஆனால் பல வருட உள்நாட்டுப் போர் அதன் விமான உள்கட்டமைப்பை சீரழித்துவிட்டன.
போர் விமானங்களை இயக்கம் திறனுள்ள விமானிகள் குறைவாக இருந்தாலும், விமானப்படையை பராமரிக்கும் திறன் ஏமனிடம் இல்லை.
சோமாலியா
சோமாலியாவில் ஒரு காலத்தில் சோவியத் கால மிக் போர் விமானங்களை வைத்திருந்தது. ஆனால் பயிற்சி உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக அதன் விமானப்படை செயல்பாட்டில் இல்லை. இங்கு விமானிகளுக்கு பெரிய பற்றாக்குறை உள்ளது.
சாட்
சாட் 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடமிருந்து MIG 29 போர் விமானங்களை வாங்கியது. ஆனால் பட்ஜெட் கட்டுப்பாடுகள் மற்றும் பயிற்சி பெற்ற விமானிகள் இல்லை.
அங்கு விமானிகளை இயக்க வெளிநாட்டு ஒப்பந்ததாரர்கள் அல்லது கூலிப்படை விமானிகள் வரவழைக்கப்படுகிறார்கள்.
போர் விமானியை பயிற்றுவிக்க 2 முதல் 3 ஆண்டுகள் மற்றும் மில்லியன் கணக்கான டொலர்கள் ஆகும். மேலும், சிமுலேட்டர்கள், பராமரிப்பு குழுக்கள், தரை ஊழியர்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் செலவும் உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட அல்லது பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நாடுகளால் இந்த செலவை தாங்க முடியாது.
பல நாடுகள் போர் விமானங்களை போருக்கு பயன்படுத்த விட்டாலும், இறையாண்மையின் அடையாளம் சர்வதேச அந்நியச் செலாவணியின் சின்னமாக வைத்துள்ளது. அணிவகுப்புகளின் போது அதை பயன்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |