ரஷ்யாவில் குடியேறிய 5 மில்லியன் உக்ரைனியர்கள்: பாதுகாப்பு அதிகாரி வழங்கிய அதிர்ச்சி தகவல்
சுமார் ஐந்து மில்லியன் மக்கள் இதுவரை உக்ரைனில் இருந்து ரஷ்யாவில் குடியேற்றம்.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனிய பகுதியில் இராணுவ சட்டம் அமுல்.
உக்ரைனில் இருந்து சுமார் ஐந்து மில்லியன் மக்கள் இதுவரை ரஷ்யாவில் குடியேறி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போர் நடவடிக்கையில் உச்சக்கட்டமாக Donetsk, Luhansk மக்கள் குடியரசுகள், Zaporizhzhia மற்றும் Kherson ஆகிய நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் முழுவதும் எதிர்ப்பு வெளிவந்த நிலையில், ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அத்துமீறிய செயல் என்றும், உக்ரைனிய பகுதிகளை முழுவதுமாக விடுவிக்கும் வரை எதிர்ப்பு தாக்குதல் தொடரும் என உக்ரைன் அறிவித்தது.
இந்நிலையில் டான்பாஸ் மற்றும் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகளில் வசிக்கும் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் ரஷ்யாவில் குடியேறி உள்ளனர் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.
AP
கூடுதல் செய்திகளுக்கு: எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை: இணைக்கப்பட்ட நகரங்களில் புடின் விதித்துள்ள புதிய சட்டம்
பாதுகாப்பு அதிகாரிகளின் இந்த தகவலை புதன்கிழமை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளில் இராணுவ சட்டத்தை இன்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அமுல்படுத்தினார்.