ஐந்து வயதில் ஒரு குழந்தைக்கு தாயான சிறுமி
பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு ஐந்து வயதுச் சிறுமியின் வயிறு பெரிதாகிக்கொண்டே சென்றதால், அவளை அவளுடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
மருத்துவமனையில், அவர்களுக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஐந்து வயதில் ஒரு குழந்தைக்கு தாயான சிறுமி
பெரு நாட்டைச் சேர்ந்த லினா (Linda Medina) அல்லது Lina Medina என்னும் அந்த ஐந்து வயது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏழு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார்கள்.
அவளது உடல் பருவமடைந்த பெண்ணைப் போல காட்சியளித்ததை அவர்கள் கண்டார்கள்.
அதாவது, அந்தச் சிறுமி முன்னரே பருவமடைந்திருக்கிறாள். அவளை யாரோ வன்புணர்ந்ததால், அவள் கர்ப்பமுற்றிருக்கிறாள்.
உலகின் இளம் தாய்
சிறுமியாக இருந்ததால் அவளால் பிரசவிக்க இயலாது என்பதால், அறுவை சிகிச்சை மூலம் அவள வயிற்றிலிருந்த குழந்தையை மருத்துவர்கள் அகற்றினார்கள்.
அது ஒரு ஆண் குழந்தை. அந்தப் பையன் தனக்கு 10 வயதாகும் வரை லினாவை தனது அக்கா என்றே நினைத்து வளர்ந்திருக்கிறான்.
Bettmann Archive
1979ஆம் ஆண்டு அபூர்வ நோய் ஒன்று காரணமாக தனது 40ஆவது வயதில் லினாவின் மகன் இறந்துபோனார். லினாவை கர்ப்பமாக்கியது யார் என்பது தெரியாமலே போய்விட்டது.
வளர்ந்து ஒரு தனிச்செயலராக பணியாற்றிய லினா, 34 ஆண்டுகளுக்குப் பிறகு Raul என்பவரை மணந்து தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்துள்ளார்.
இப்போது லினா எங்கிருக்கிறார், உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அவர் உயிருடன் இருந்தால், இப்போது அவருக்கு 89 வயது இருக்கும். மிகவும் இளம் வயதில் ஒரு குழந்தைக்கு தாயானவர் என்ற பெயர் மட்டும் லினாவுக்கு நிலைத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |