5000 மாணவிகளுக்கு விஷம்! நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..அலறல் வீடியோ
ஈரானில் 5000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் மர்ம மரணம்
ஈரான் நாட்டில் இளம்பெண் மாஷா அமினியின் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் உண்டான கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அதைவிட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்நாட்டில் உள்ள பாடசாலைகளில் பயிலும் 5,000 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
March 5, 2023. Fatemieh Art School in Hamedan.
— 1500tasvir_en (@1500tasvir_en) March 5, 2023
Schoolgirls shout: “We don't want to die!”pic.twitter.com/ssF6a0YYUt
5000 மாணவிகளுக்கு விஷம்
கடந்த நவம்பர் மாதம் முதல் சுமார் 230 பாடசாலைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5000க்கும் மேற்பட்ட மாணவிகள் விஷம் குடித்துள்ளதாகவும் சிறுபான்மை உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர் முகமது-ஹசன் அஸ்பாரி தெரிவித்ததாக ISNA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் யாரும் இறக்கவில்லை. ஆனால் பல மாணவிகளுக்கு சுவாசக் கோளாறுகள், வாந்தி, மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட்டுள்ளது.
கொந்தளித்த தலைவர்
மேலும் இது பாடசாலைகளை மூடும் முயற்சி என்று கூறப்படுகிறது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இவ்விகாரம் தொடர்பாக குற்றவாளிகளை தண்டிக்க உத்தரவிட்டுள்ளார்.
@EPA
ஒரு சிறுமி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபோது சரிந்து விழுந்ததும், ''நாங்கள் சாக விரும்பவில்லை'' என சிலர் கதறும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் விஷத்தின் வகை மற்றும் காரணத்தை கண்டறிய பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்த வகையான விஷம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Reuters