லெபனானில் ஐ.நா அமைதி படை வீரர் மீது துப்பாக்கி சூடு: தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்கா அறிவுறுத்தல்
லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படை வீரர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
ஐ.நா அமைதி படை வீரர் மீது தாக்குதல்
இஸ்ரேலிய படையினருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே தெற்கு லெபனானில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்து இருப்பதாக ஐ.நாவின் இடைக்கால படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுடன் சேர்த்து இதுவரை ஐ.நாவின் 5வது அமைதிப் படை வீரர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை வெளியான அறிக்கையில், நகோராவில் உள்ள ஐ.நாவின் தலைமையகத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை நடந்த சண்டையின் போது அமைதிப்படை உறுப்பினர் காயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த அறிக்கையில், எந்த தரப்பில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு என்று தெளிவாக தெரிய வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயமடைந்த வீரர் நகோரா மருத்துவமனையில் அனுமதிப்பட்டதுடன், அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து துப்பாக்கி குண்டு வெளியேற்றப்பட்டு உள்ளது.
இஸ்ரேலுக்கு கண்டனம்
இதற்கிடையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்த முந்தைய இரண்டு தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் ஐ.நா அமைதிப் படை வீரர்கள் மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தி இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |