மத்திய சிலியில் பயங்கர நிலநடுக்கம் - குலுங்கிய கட்டிடம்
மத்திய சிலி கடற்கரையில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மத்திய சிலியில் பயங்கர நிலநடுக்கம்
மத்திய சிலி கடற்கரையில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவிக்கையில், மத்திய சிலி கடற்கரையில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11:03 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் நிலைக்கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதம் பற்றியோ, பொருட்சேதம் பற்றியோ இன்னும் தகவல் வெளியாகவில்லை.
தற்போது, இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Sismo M6.4 (Mww) con epicentro a 111km al noroeste de Cobquecura, Chile desde Viña del Mar (Población Vergara)
— Verdeptune (@verdeptune) March 30, 2023
Fecha y hora de Chile: 14:33 - Jueves 30 de Marzo 2023 #Temblor #Chile #Earthquake #ViñadelMar pic.twitter.com/AYc49OwpPB
An earthquake with a magnitude of 6.2 on the Richter Scale hit 328km SW of Santiago, Chile: National Centre for Seismology pic.twitter.com/R9ALb4bfUW
— ANI (@ANI) March 30, 2023