ஒரே நாளில் 6 சகோதரிகளை திருமணம் செய்த 6 சகோதரர்கள்! சுவாரஸ்யமான காரணம்
பாகிஸ்தானில் ஒரே நாளில் 6 சகோதரர்கள் 6 சகோதரிகளை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
6 சகோதரர்கள் 6 சகோதரிகள் திருமணம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ஒரு அசாதாரண திருமணம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சகோதரர்கள், இன்னொரு குடும்பத்தில் உள்ள ஆறு சகோதரிகளை ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த திருமணம் எளிமை மற்றும் ஒற்றுமையின் உன்னத உதாரணமாக பாராட்டப்படுகிறது.
வரதட்சணை முறையை முற்றிலும் தவிர்த்து, மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றன.
மணமக்கள் மற்றும் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
சுவாரஸ்யமான காரணம்
இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள காரணத்தைப் பற்றி பேசிய மூத்த மணமகன், "நாங்கள் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல இடங்களில் திருமண செலவுகளுக்காக மக்கள் தங்கள் சொத்துக்களை விற்று, கடன் வாங்கி தவிக்கின்றனர்.
திருமணங்கள் எளிமையாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கவும், தேவையற்ற நிதிச் சுமையை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆறு சகோதரர்களும் பல ஆண்டுகளாக ஒன்றாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவை வைத்திருந்தனர்.
இதற்காக, அவர்களின் கடைசி தம்பிக்கு 18 வயது வரும் வரை பொறுமையாக காத்திருந்தனர். வரதட்சணை இல்லாத இந்த திருமணம் பாகிஸ்தானில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |