தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து உலுக்கிய 6 நிலநடுக்கங்கள்! அச்சத்தில் மக்கள்
தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தள்ளது.
இன்று அதிகாலை 5.37 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.
இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்
இந்தநிலையில் முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு.
5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது
மேலும் 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
சில இடங்களில் வலுவாக இது உணரப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
فيديو أثناء #الزلزال الذي ضرب طاجيكستان بقوة 7.3 #Tajikistan pic.twitter.com/XfKpuv2RNg
— نايف عيظه العماد (@Naif_Alemad1) February 23, 2023