பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்தில் 6 பேர் பலி! நைஜீரியாவில் சோக சம்பவம்
நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகளை ஏற்றி சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தாக தகவல் வெளிவந்துள்ளது. பேருந்து இகேஜா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.
விபத்து
அப்பொழுது அவ்வழியாக வேகமாக வந்த ரயில் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ரெயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமடையவில்லை.
பேருந்தில் இருந்து 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்தாகும்.