தமிழகத்தில் சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்! 6 பேர் பலியான சோகம்
தமிழகத்தில் சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லொறி மோதியதில், 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
6 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சிலர் சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது, சாலையில் அதிக வேகமாக வந்த டிப்பர் லொறி ஒன்று அவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து, படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பொலிசார் வழக்குப்பதிவு
இந்த விபத்து தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த நபர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் பொலிசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், டிப்பர் லொறி ஓட்டி வந்த ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார். சாலை விபத்தில் உடல் சிதறி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |