புற்றுநோயால் தந்தை இறந்த 2 நாளில் மகன் மரணம்! அதிர்ச்சியில் தாத்தா தற்கொலை..ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்த சோகம்
தமிழக மாவட்டம் நாகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தந்தை மரணம்
நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் அருகே வசித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவன் கோகுல்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரின் தந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் பழுதான மின் விளக்கை சிறுவன் கோகுல் சரி செய்ய முயன்றுள்ளார்.
மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது சிறுவனின் தாத்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன், பேரன் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மனமுடைந்த அவர், தனது உயிரை மாய்த்துக் கொள்ள விஷம் அருந்தியுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Representational/File
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |