லொறி மோதிய விபத்தில் உடல் பாகங்கள் சிதறி ஆண்-பெண் பரிதாப பலி! தமிழகத்தில் சோக சம்பவம்
சென்னை பூந்தமல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆண், பெண் லொறி மோதிய விபத்தில் பலியாகினர்.
துணை காவல் ஆய்வாளரின் மகன்
மதுரை மாவட்டம் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நாகராஜ்.
இவரது மகன் கோபி கிருஷ்ணன் (27) சென்னை திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கோபி கிருஷ்ணன் பெண்ணொருவருடன் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கோர பலி
அப்போது பின்னால் வந்த லொறி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழ, அவர்கள் மீது லொறியின் சக்கரம் ஏறியது.
இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பொலிசாரின் விசாரணையில், கோபி கிருஷ்ணன் மற்றும் குறித்த பெண்ணின் உடல் பாகங்கள் சிதறி கோரமாக இறந்து கிடந்ததாக தெரிய வந்துள்ளது. ஆண்-பெண் சாலை விபத்தில் கோரமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |