கூலித்தொழிலாளி டூ சூப்பர் மொடல்! வியப்பில் ஆழ்த்தும் 60 வயது முதியவர்
கேரளாவின் கோழிக்கோட்டில் மம்மிகா என்ற சாதாரண கூலித்தொழிலாளியை மேக்கப் கலைஞரான மஜ்னாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் சேர்ந்து சூப்பர் மாடலாக மாற்றி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோட்டு பகுதியில் மம்மிகா (60) என்ற வயதான முதியவர் கூலி தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
அழுக்கு சட்டை, நைந்துப் போன லுங்கி என்ற வேஷத்தில் சுற்றி திரிந்து கொண்டு வந்தவரை, மேக்கப் கலைஞர் மஜ்னாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆஷிக் ஃபுவாத் மற்றும் ஷபீப் வயலில் ஆகியோர் இணைத்து சூப்பர் டூப்பர் மாடாலக மாற்றியுள்ளனர்.
மேலும் மம்மிகாவின் மாடலிங் திறமையைக் கண்டறிந்த புகைப்படக் கலைஞர் ஷரீக் வயல், அவரை புகைப்படங்கள் எடுத்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து மம்மிக்காவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
மம்மிகாவும் அவருடைய பழைய புகைப்படத்தையும், தற்போது சூப்பர் டூப்பர் மாடலாக எடுத்த புகைப்படத்தையும் கம்பேர் செய்து தனது புதிய இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டு வருகிறார்.
மம்மிகாவின் இந்த அதிரடி மாற்றத்தை அப்பகுதி மக்கள் பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் அவரை இன்ஸ்டாகிராமில் பார்க்கும் மக்களும் கமெண்டுகளில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அதனை சாத்தியமாக்கிய ஷரிக் மற்றும் மஜ்னாஸ், ஆஷிக் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.