அரசுக்கு எதிரான போராட்டம்! துப்பாக்கிச்சூட்டில் 62 பேர் பலி
சாட் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நிலையில் டோனா, சாரா நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன
ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இட்னோ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மஹமத் இட்ரிஸ் இடைக்கால ஜனாதிபதியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்
சாட் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 62 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசில், இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மஹமத் இட்ரிஸ் டெபியின் பதவிக்காலம் நீட்டிப்பு (2 ஆண்டுகள்) செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆளும் அரசுக்கு எதிராக கிளர்த்தெழுந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை தடுக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியபோதும், அவர்கள் தொடர்ந்து முன்னேறியதால் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
AP
அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பலர் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேபோல் மவுண்டோ நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.
(AP Photo)(Uncredited / Associated Press)
AP