தெருவில் கைவிடப்பட்ட 7 சிங்கக்குட்டிகள்! பிறகு என்ன நடந்தது?
குவைத்தில் தெருவில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 7 சிங்கக்குட்டிகள் மீட்கப்பட்டு உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
சிங்கக் குட்டிகள் மக்களைத் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவற்றை உயிரியல் பூங்காவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
பின்னர் சுற்றுச்சூழல் பொது ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் குழுக்கள் வந்து சிங்கக்குட்டிகளை நேரடியாக மிருகக்காட்சிசாலைக்கு மாற்றினர்.
Representative Image
சிங்கக் குட்டிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயிடமிருந்து போதுமான தாய்ப்பால் கிடைக்காததால் அவற்றின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. மிருகக்காட்சிசாலையில் இந்த சிங்கக் குட்டிகளுக்குப் பொறுப்பான நௌஃப் அல் பத்ர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பது கடுமையான குற்றம். இது தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Representative Image-Alamy Stock Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |