சாலையை மறித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..இரக்கமின்றி சுட்டுக்கொன்ற 77 வயது முதியவர்..அதிர வைத்த சம்பவம்
பனாமாவில் சுற்றுச்சூழல் போராட்டக்காரர்கள் இருவரை 77 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சுற்றுசூழல் ஆர்வலர்கள்
பனாமாவின் Chame மாவட்டத்தில் உள்ள பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, காரில் இருந்து இறங்கி வந்த கென்னத் டார்லிங்டன் (77) என்ற நபர், தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு சுற்றுச்சூழல் போராட்டக்காரர்களை நோக்கி சுட்டார்.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் அப்டீல் தியாஸ் என பின்னர் தெரிய வந்தது. மேலும் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான இவான் ரோட்ரிகஸ் (62) என்பவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் பாதி வழியிலேயே இறந்துவிட்டார்.
2 மணிநேர விசாரணை
இந்த நிலையில் தாக்குதல்தாரியான கென்னத் டார்லிங்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் இரண்டு மணிநேர விசாரணை முடிந்து அவர் காவலில் வைக்கப்பட்டார்.
உள்ளூர் ஊடகங்களின்படி, பனாமாவில் பிறந்த அமெரிக்க குடிமகனான கென்னத், ஓய்வு பெற்ற வழக்கறிஞர் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் போராட்டத்தை படம் பிடிக்க குவிந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி குழுவினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |