லொட்டரியில் 77 வயது முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்: மனைவிக்காக வாங்கிய முதல் பொருள் என்ன தெரியுமா!
அமெரிக்காவை சேர்ந்த 77 வயது முதியவர் லொட்டரியில் 5 மில்லியன் டாலர் தொகையை வெற்றி பெற்றுள்ளார்.
முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வசித்து வரும் பட்(Bud) என்ற 77 வயது முதியவர் சமீபத்தில் பரிசு தொகையை அள்ளும் நோக்கில் லொட்டரி ஒன்றை வாங்கியுள்ளார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்று வாழ்ந்து வரும் பட் லொட்டரியை வாங்கிவிட்டு ஹோலி க்ராஸ் வைல்டர்நஸ்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கொலராடோ லொட்டரியின் அதிர்ஷ்ட குலுக்கல் செப்டம்பர் 6ம் திகதி நடைபெற்றுள்ளது.
இந்த குலுக்கலில் 77 வயது முதியவரான பட் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான(இந்திய ரூபாய் மதிப்பில் 41 கோடியே 60 லட்சம்) பரிசு தொகை வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் சுற்றுப்பயணத்தில் இருந்த பட் பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு தான் தன்னுடைய லொட்டரி டிக்கெட் எண்ணை சரி பார்த்துள்ளார். அப்போது தான் தன்னுடைய லொட்டரி டிக்கெட்டிற்கு பரிசு தொகை கிடைத்துள்ளது என என்பதை அறிந்துள்ளார்.
மனைவிக்கு வாங்கிய முதல் பரிசு
லொட்டரியில் வெற்றி பெற்றதை உறுதிப்படுத்தி கொண்ட பட் இரண்டரை லட்சம் டாலர்கள் ரொக்கமாக பெறும் முறையை தேர்வு செய்துள்ளார்.
மிகப்பெரிய தொகையை வெற்றி பெற்ற பிறகு, பட் தன் மனைவிக்கு தர்பூசணி பழமும், பூங்கொத்து ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
அத்துடன் பரிசில் கணிசமான தொகையை தொண்டு நிறுவனத்திற்கும், மனைவியின் அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி லொட்டரியை எப்படி தேர்வு செய்வது என்ற ரகசியத்தையும் வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |