திக்குமுக்காட செய்த 8000 புலம்பெயர்ந்தவர்கள்: சர்வதேச உதவி நாடும் இத்தாலி
இத்தாலியின் லம்பேடுசா தீவிற்கு கடந்த 2 நாட்களில் மட்டும் 8000 புலம்பெயர்ந்தவர்கள் வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படையெடுக்கும் புலம்பெயர்ந்தவர்கள்
கிட்டத்தட்ட 8000 புலம்பெயர்ந்தவர்கள் வாழ்வாதாரம் வேண்டி இத்தாலியின் லம்பேடுசா(Lampedusa) தீவிற்கு சட்டவிரோதமாக வந்து இறங்கியுள்ளனர்.
இவர்கள் லிபியா மற்றும் துனிசியாவில் இருந்து சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான படகு பயணங்கள் மூலம் இத்தாலி தீவிற்கு வந்தடைந்துள்ளனர்.
தீவில் உள்ள உள்ளூர் மக்களின் எண்ணிக்கையே 6000 என இருக்கும் நிலையில், தற்போது அவர்களை விட புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 8000 என்ற அளவில் அதிகமாக உள்ளது.
இதனால் தீவின் நிலைமையானது மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, அத்துடன் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லம்பேடுசா தீவிற்கு வந்துள்ள புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதுடன், பொலிஸாரையும் கடுமையாக தாக்குவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
உதவி வேண்டி நிற்கும் அரசு
இந்நிலையில் அளவுக்கு அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதால் அவர்களுக்கு புலம்பெயர்ந்தோர் வரவேற்பு மையத்தால் இடமளித்து ஆதரவு வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AFP
இதனால் தீவின் அதிகாரிகள் அரசாங்கத்திடம் நேரடியாக உதவி கேட்டு இருப்பதை தொடர்ந்து, இத்தாலி அரசு மற்ற நாடுகளிடம் உதவி கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி வழங்கிய தகவலில், புலம்பெயர்ந்தவர்களின் புதிய அலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய இத்தாலிக்கு சர்வதேச உதவிகள் தேவை என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |