கடலில் விரைவுப் படகு மூழ்கியதில் 8 பேர் பலியான சோகம்
இந்தோனேசியாவில் விரைவுப் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆசிய நாடான இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் 30 பயணிகளுடன் விரைவுப் படகு ஒன்று கடலில் சென்றது.
நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் படகு மோதி விபத்திற்குள்ளானது.
இதில் படகு கடலில் மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிர் தப்பியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து மாகாண தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் முஹம்மது அராஃபா கூறுகையில்,
உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துவா நோனா என்ற வேகப்படகு, நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டு மீது மோதியதில், படகில் ஓட்டை உண்டாகி சேதமடைந்தது.
ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே விபத்து ஏற்பட்டது என்றார் என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் உள்ளூர் தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் பணியாளர்கள், உள்ளூர் சுகாதாரத் துரையின் படகுகள் மற்றும் சமூக தன்னார்வலர்களை உள்ளடக்கிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |