இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: மெக்சிகோவில் 8 பேர் வரை பலி
மெக்சிகோவின் ஜெரெஸ் நகரில் உள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
வடக்கு மெக்சிகோவின் Zacatecas மாநிலத்தில் உள்ள ஜெரெஸ் நகரின் பரபரப்பான இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மதுக்கடைக்கு இரண்டு வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள், விடுதியில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியதாக பாதுகாப்பு செயலகத்தின் அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.
Mexico: Armed gunmen traveling in a convoy of six pickup trucks attacked Mexican Municipal Police headquarters in Tamasopo, San Luis Potosí.
— TheRealBiffBifford ?? (@TBifford) January 28, 2023
7 people killed and 10 injured after a mass shooting in a bar called El Venadito in Jerez, Zacatecas. Multiple gunmen were invollved.
? pic.twitter.com/33UqgPxlhQ
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடக அறிக்கை
இந்த பயரங்க சம்பவத்தில் கிளப் ஊழியர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Twitter
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கிளப்பின் தளம் ரத்த வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பீதியடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில தலைநகர் ஜகாடெகாஸிலிருந்து தென்மேற்கே 60 கிலோமீட்டர் தொலைவில், ஜெரெஸ் நகரத்தின் மையத்தில் “எல் வெனாடிடோ" என்று அழைக்கப்படும் பார் உள்ளது குறிப்பிடத்தக்கது.