புயல்வேகத்தில் மோதிய கட்டுப்பாட்டை இழந்த லொறி! 8 பேர் பலி..கொள்ளையடித்த குடியிருப்பாளர்கள்
கென்யாவில் லொறி மோதிய பாரிய விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தறிகெட்டு ஓடிய லொறி
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மிகோரி-இசெபனியா சாலையில் அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
@Twitter (TeddyOdhiambo)
பாதசாரிகள் மற்றும் பல வாகனங்கள் மீது லொறி மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
அரிசியை கொள்ளையடித்த குடியிருப்பாளர்கள்
இதற்கிடையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கும் போது, சில குடியிருப்பாளர்கள் லொறியின் சரக்குகளில் இருந்து அரிசியை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
@Twitter (TeddyOdhiambo)
மிகோரி கவுண்டி கமாண்டர் மார்க் வான்ஜாலா கூறும்போது, விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
@Twitter (TeddyOdhiambo)