பயிற்சியாளர் தாக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்! தற்காப்புக் கலை பள்ளியில் சேர்ந்த மறுநாளே நேர்ந்த விபரீதம்
சீனாவில் தற்காப்புக்கலை பள்ளி ஒன்றில், 8 வயது மாணவர் பயிற்சியாளரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்காப்புக் கலை பள்ளி
ஷான்டாங்கின் கிங்டாவோவில் உள்ள Chongde Juying எனும் தற்காப்புக் கலை பள்ளியில், 8 வயது சிறுவன் கடந்த 17ஆம் சேர்ந்துள்ளார். அதற்கு அடுத்த நாளே அவர் பயிற்சியின்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சிறுவன் சென்யாங்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிறுவனுக்கு பயிற்சி அளித்தவர் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மூவர் கைது
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் தாயார் தனது மகனின் கால்களில் காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டார். இதுதொடர்பில் தற்காப்புக் கலை கிளப்புடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப் பாதுகாப்பு பணியகம் சென்யாங் கிளை சூன் 26ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், வேண்டுமென்றே தீங்கு விளைவித்து மரணத்திற்கு வழி வகுத்ததற்கு குற்றவியல் நடவடிக்கைகளை மூவரும் எதிர்கொள்வார்கள் என தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கிளப் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |