அண்ணாமலையின் கால் சுட்டு விடாமல் இருக்க சாலையில் ஊற்றப்பட்ட 80,000 லிட்டர் தண்ணீர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரைக்காக கர்நாடக டேங்கர் லாரிகள் மூலம் 80,000 லிட்டர் தண்ணீரை சாலையில் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் பாத யாத்திரை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் 168 நாட்களில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை சென்னையில் நிறைவு செய்கிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணடிப்பு
இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு காலை 9 மணிக்கு அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 10 மணிக்கு தான் அண்ணாமலை வந்தார்.
பின்பு, தொடங்கப்பட்ட பாதயாத்திரையில் ஷூ அணிந்து கொண்டு அண்ணாமலை நடந்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் எடுத்து விட்டார் எனக் கூறப்படுகிறது. இப்படி பாதயாத்திரையில் வினோத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
அந்தவகையில், தூத்துக்குடியில் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கிய இடம் முதல், பாதயாத்திரையை முடித்த இடம் வரை 2.5 கிலோமீட்டர் தூரம் வரை கர்நாடக பதிவெண் கொண்ட டேங்கர் லாரிகளில் இருந்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஊற்றப்பட்டது.
அண்ணாமலையின் கால் சுட்டு விடக் கூடாது என்பதற்காக 80,000 லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஊற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கு அதிருப்தியையும், வேதனையையும் கொடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |