அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட வராது - எஸ்.வி.சேகர் கிண்டல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட வராது என்று நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.
அண்ணாமலை நடைபயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் 168 நாட்களில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை சென்னையில் நிறைவு செய்கிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
அண்ணாமலையால் சீட் கிடைக்காது
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்தித்த போது,"தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட வராது. அதிமுகவின் ஓட்டு பாஜகவிற்கு விழாது. நடைபயனத்தால் அண்ணாமலைக்கு லாபம், பாஜகவிற்கு நஷ்டம்" என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் பாஜக தலைமை சரியில்லை. தலைவருக்கு பேருந்தில் போகவே நேரம் இல்லை. இதில் அவரே சிங்கம் என கூறிக் கொள்கிறார். இந்த நடைப்பயணத்தின் மூலம் ஒரு தாக்கமும் ஏற்படாது. அண்ணாமலை அரசியல் பூஜ்யம்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |