5% நடைபயணம்.. மீதி ரெஸ்ட்.. அண்ணாமலை சாயம் வெளுக்குது! எஸ்.வி.சேகர் சாடல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் குறித்து எஸ்.வி சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாமலை நடைபயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை"என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் 168 நாட்களில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை சென்னையில் நிறைவு செய்கிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
எழும் விமர்சனங்கள்
அண்ணாமலை 10 நாள்கள் நடைபயணம் முடித்து 11- வது நாளாக பாத யாத்திரையை மீண்டும் ஆரம்பித்து உள்ளார். இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
அதாவது, இவர் கேராவன் மூலமாகவே பயணம் மேற்கொள்கிறார் எனவும், அதிகமாக நடக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், இடைவெளியின் போது அண்ணாமலை சாப்பிட, தூங்க கேரவன் அமைக்கப்பட்டுள்ளது. மெத்தை படுக்கை, ஏசி போன்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கேரவனுக்கு வெளியில் இந்திய பிரதமர் மோடியின் புகைப்படம் அமைந்துள்ளது.
இவர், பாத யாத்திரையை நடக்காமல் அதிகமாக ஹோட்டல்களில் ரெஸ்ட் எடுப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் வருவதாக கூறப்படுகிறது.
சாயம் வெளுத்துப்போச்சு
இந்நிலையில், பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை மீது எஸ்.வி.சேகர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழ் செய்தித்தாள் ஒன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 5 சதவீதம் தான் நடைபயணம் மேற்கொள்கிறார். மீது காரில் ரெஸ்ட் எடுக்கிறார். சத்தியமா நம்புங்க, இது பாத யாத்திரை தான் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
சாயம் வெளுக்குது. pic.twitter.com/Impwf4N2RX
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) August 8, 2023
இந்த செய்திதாளின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சாயம் வெளுத்துப்போச்சு என்று அண்ணாமலையை சாடி ட்வீட் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |