தென் கொரியாவை உலுக்கிய சம்பவம்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: டசின் கணக்கானோர் மாயம்
தென்கொரியாவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தற்போது பலி எண்ணிக்கை 85 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகளை மீட்கும் முயற்சி
முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்தில் சிக்கிய விமானத்தின் இடிபாடுகளில் இருந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற விமானம் சுவற்றில் மோதி நெருப்பு கோளமாக மாறியிருந்தது. 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் தரையிறங்கிய அந்த விமானம் முதலில் அதன் லேண்டிங் கியர் திறக்கத் தவறியதை அடுத்து இரண்டாவது முயற்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம்
இறந்த 85 பேர்களில் 46 பேர் பெண்கள் மற்றும் 39 பேர் ஆண்கள் எனவும் டசின் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. உள்ளூர் தீயணைப்புத் தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து இரண்டு பணியாளர்கள் மீட்கப்பட்டதாகக் கூறினார்.
பறவை மோதியதில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எண்ரே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, வானிலையும் விபத்துக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தை அடுத்து வால் பகுதி மட்டுமே அடையாளம் காணக்கூடிய வகையில் விமானம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |