லிபியாவில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 9 இந்திய மாலுமிகள் விடுவிப்பு
லிபியாவில் கிளர்ச்சிக் குழுவால் பல மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த 9 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
லிபியாவில் உள்ளூர் போராளிகளால் பல மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட வணிகக் கப்பலின் 9 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைபிடிக்கப்பட்ட 9 இந்திய மாலுமிகள்
கிரேக்க நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் கேமரூனின் கொடியை சுமந்து சென்ற. இந்த கப்பல் மால்டாவிலிருந்து திரிபோலிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தபொது பிடிபட்டது.
பிடிபட்ட ஒன்பது இந்தியக் குழுவினரில் ஐந்து பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலா ஒருவர் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Twitter/@sidhant
பிப்ரவரி 15-ஆம் திகதி துனிசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை குழு ஒன்று தொடர்பு கொண்டு, அவர்கள் பணிபுரிந்த MT மாயா 1 என்ற வணிகக் கப்பல் லிபியாவின் கடற்கரைக்கு அருகில் உடைந்ததாகவும், அவர்கள் உள்ளூர் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறியது.
இந்திய தூதரகம் நடவடிக்கை
இதையடுத்து இந்திய தூதரகம் லிபிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டது, மேலும் குழுவின் பாதுகாப்பையும் முடிந்தவரை விரைவாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதையும் உறுதி செய்தது.
வெளிவிவகார அமைச்சும் இந்திய தூதரகமும் லிபியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து இந்த விஷயத்தைப் பின்தொடர்ந்து, வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இந்திய நாட்டினரின் குடும்ப உறுப்பினர்களை தொடர்ந்து தகவல்களை கொடுத்துவந்தன.
Ambassador of India to Tunisia Ngulkham Jathom Gangte meets the 9 Indians who were taken out from captivity from rebels in Libya. Lauds role of Tabassum Mansoor in the release of the Indian sailors. https://t.co/RXanCF9ltF pic.twitter.com/MaNeeWAky0
— Sidhant Sibal (@sidhant) June 1, 2023
இப்போது அவர்களை அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை விடுவிக்கப்பட்ட அவர்கள் லிபிய தலைநகர் திரிபோலியை அடைந்தனர், அங்கு துனிசியாவிற்கான இந்திய தூதர் அவர்களை வரவேற்றார்.