மாலைதீவில் இலங்கை தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நெரிசலான தங்குமிடங்களில் தீ பரவியது.
எரிந்த கட்டிடத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.
மாலைதீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
தீவுக்கூட்டத்தின் தலைநகரமான மாலே பிரபலமான மற்றும் பரபரப்பான விடுமுறை இடமாக அறியப்படுகிறது, இது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் தீ விபத்து
வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது பரவியது. கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்க சுமார் நான்கு மணி நேரம் ஆனதாகக் கூறினர்.
வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்க சுமார் நான்கு மணி நேரம் ஆனதாகக் கூறினர்.
AFP
பெரும்பாலும் இந்தியர்கள்
இதனிடையே, உயிரிழந்தவர்களில் ஒன்பது இந்தியர்களும் ஒரு வங்கதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை சேகரித்து வருகிறது.
மாலைதீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "மாலேயில் நடந்த தீ விபத்தில் இந்திய நாட்டவர்கள் உட்பட பலரின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மாலைதீவு அதிகாரிகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்" என்று உயர் ஸ்தானிகராலயம் ட்வீட் செய்துள்ளது.
Photo: Twitter/@liyaakujjaa
மாலைதீவின் மக்கள் தொகையில் பாதி மக்கள் மாலே நகரத்தில் தான் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலும் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.