கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி! சம்பவ இடத்திலேயே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த பாதுகாப்புப்படை
தாக்குதல் நிகழ்ந்த ஹொட்டல் ஒரு பள்ளிக்கு அருகில் இருந்ததால் பல மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
படுகாயமடைந்த 47 பேரில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது
சோமாலியா நாட்டில் கார் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசை கவிழ்க்க பயங்கரவாத அமைப்பு முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் கிஸ்மாயு நகரில் உள்ள ஹொட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், ஹொட்டலின் உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
Reuters
இந்த பயங்கர தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அத்துடன் 47 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.