இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேற்றம் - இத்தனை லட்சம் பேரா?
இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய குடியுரிமை துறப்பு
மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங், எழுத்துபூர்வமாக இது தொடர்பான விவரங்களை மாநிலங்களைவையில் அளித்துள்ளார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளில், 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். ஆண்டு வாரியாக குடியுரிமையை துறப்பவர்களின் தரவுகளை அரசு பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
2011 மற்றும் 2019 க்கு இடையில் மட்டும் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், கொரோனோவால் ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தூதரக மூடல்கள் மற்றும் செயலாக்க தாமதங்கள் காரணமாக வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த ஆண்டில் 85,256 பேர் மட்டும் குடியுரிமையை துறந்தனர்.
2020 க்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் 1.50 லட்சத்திற்கு குறைவானவர்களே இந்திய குடியுரிமையை துறந்தனர். 2022 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 2 லட்சத்தை கடந்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் 1,22,819 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டில் 2,06,378 ஆக உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |