தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 உக்ரேனியர்களை சுட்டுக்கொன்ற ரஷ்யர்கள்!
உக்ரைனின் கிழக்கு நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தூங்கிக் கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 பேர் படுகொலை
ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரேனிய நகரம் வோல்னோவாகா. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்நகரில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இருவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
[ukraine-army-suffered-90-000-casualties-
இதுதொடர்பாக உக்ரேனிய டொனெட்ஸ்க் பிராந்திய வழக்குரைஞர் அலுவலகம் ஆரம்ப தகவல்களின் அடிப்படையில் கூறுகையில்,
'இராணுவ சீருடையில் இருந்த ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கு வசிக்கும் குடும்பத்தினர் ரஷ்ய இராணுவப் பிரிவுக்கு தங்குவதற்கு வீட்டைக் காலி செய்யுமாறு கோரினர்.
வீட்டின் உரிமையாளர் மறுத்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களை உடல் ரீதியாக வன்முறையால் அச்சுறுத்திவிட்டு வெளியேறினர். சில நாட்களுக்குப் பிறகு, துப்பாக்கிதாரிகள் திரும்பி வந்து அந்நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தின் 9 உறுப்பினர்களையும் சுட்டுக் கொன்றனர்' என தெரிவித்துள்ளது.
ரஷ்ய புலனாய்வாளர்கள் அறிக்கை
அத்துடன், 'போரின் சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மீறிய குற்றவியல் நடவடிக்கைகளில் விசாரணைக்கு முந்தைய விசாரணை தொடங்கப்பட்டது' என கூறியுள்ளது.
ASTRA
இச்சம்பவம் தொடர்பில் இரண்டு ரஷ்ய படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என்று அழைக்கப்படும் ரஷ்ய கூட்டமைப்பின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில், அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றும் தூர கிழக்கைச் சேர்ந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் என தெரிவித்துள்ளது.
Donetsk Region Prosecutor's office
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |