வாக்னர் கூலிப்படையினர் கொல்லப்படலாம் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படையினர் மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, அடுத்த 72 மணி நேரத்தில் வாக்னர் கூலிப்படையில் மீதமிருப்போர் கொல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
தங்கள் தலைவரான Yevgeny Prigozhin கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பழிக்குப் பழி வாங்க இருப்பதாக மீதமிருக்கும் வாக்னர் குழுவினர் உறுதிமொழி எடுத்துள்ளனர். அதன்படி அவர்கள் விரைவில் மீண்டும் ரஷ்யாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த தகவல் வெளியானதுமே புடின் விரைவாக தக்க நடவடிக்கை எடுக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் ராணுவ உளவுத்துறை அலுவலரான Matt Shoemaker தெரிவித்துள்ளார். அதனால், அடுத்த 72 மணி நேரத்தில், மீதமிருக்கும் வாக்னர் குழுவினருக்கு ஆபத்து என்று கூறியுள்ள அவர், குழுவில் மீதமிருக்கும் மற்றவர்களும், வழக்கம் போல, ஆனால், சர்வதேச நாடுகளின் கவனம் ஈர்க்காமலே, தற்கொலை, அல்லது ஜன்னலிருந்து விழுந்து உயிரிழக்கலாம் என்கிறார்.
சுற்றுலாப்பயணிகளை வரவேற்றோமா, நல்ல வருவாய் வந்ததா, யாருக்கும் எந்த தொல்லையும் இல்லாமல், நாமாயிற்று நம் நாடாயிற்று என எந்த பிரச்சினையில் தலையிடாமல் இருந்த சுவிட்சர்லாந்தை, புடினுடைய உக்ரைன் ஊடுருவல் நிச்சயம் மாற்றிவிட்டிருப்பது நன்கு தெரிகிறது.
ராணுவத்துக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காத சுவிட்சர்லாந்து, உக்ரைன் மீது ரஷ்யா திடீரென போர் தொடுத்ததால், நமக்கும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது, போர் வந்தால் நாம் அதை எப்படி எதிர்கொள்வது என யோசிக்கத் துவங்கியுள்ளது. சுவிஸ் ராணுவத்தின் தலைவரான Lieutenant General Thomas Sussli, சுவிஸ் ராணுவத்தை பலப்படுத்த 13 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான புடினுடைய சட்ட விரோத ஊடுருவல், ஐரோப்பாவின் பாதுகாப்பில் இடைவெளியை உருவாக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆகவேதான், எதற்கும் தயாராக இருக்கும் விதத்தில் ராணுவத்தை வலுப்படுத்த அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், G20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்கிறார். இந்த தகவல் வெளியானதுமே கூடவே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.
தற்போது, 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்தியா சார்பில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான பியுஷ் கோயல், பிரித்தானியா சார்பில் பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனாக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்த சூழலில் ரிஷி இந்தியா செல்கிறார். அவரும் இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிகிறது. அந்த விடயம் தொடர்பில்தான் தற்போது பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பியுள்ளார்கள்.
மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் சேவை இந்தோனேசியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சுமார் அறுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சீன நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாதை, இந்தோனேசியாவின் ஜாவா தீவின் தலைநகர் ஜகார்த்தா-வை படுங் நகருடன் இணைக்கிறது. இந்த அதிவேக விரைவு ரயில் சுமார் மணிக்கு 350 கி மீ வேகத்தில் செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவே தென் கிழக்கு ஆசியாவிலேயே அதிவிரைவு ரயில் பாதை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அதிவேக விரைவு ரயிலில் வெறும் 40 நிமிடங்களில் 143 கி மீ தூரத்தை கடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பாம்பானோ(Pompano Beach) கடற்கரைக்கு அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீயணைப்பு மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு முன்னதாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோவில், ஹெலிகாப்டரின் நடுப்பகுதியில் தீ எரிவதை பார்க்க முடிகிறது, அத்துடன் ஹெலிகாப்டர் தரையில் மோதுவதற்கு முன்னதாக 2 துண்டுகளாக விழுவது தெரிகிறது. தீயணைப்பு மீட்பு ஹெலிகாப்டர் வடக்கு லாடர்டேலில்(Lauderdale) ஏற்பட்ட சம்பவத்திற்காக புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தின் போது 3 பேர் வரை விமானத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |