வெறும் 226 பேர் இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர்! நேரலையில் கொந்தளித்த சங்கக்காரா
21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை (இலங்கையை) 226 (எம்.பி-க்கள்) பேர் மண்டியிட வைத்துள்ளனர் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் நேரலையில் ஹெஷான் டி சில்வா உடன் நடந்த நேர்காணில் பேசிய சங்கக்காரா தெரிவித்தார்.
நேரலையில் பேசிய சங்கக்காரா, நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வகுத்துள்ளனர் மற்றும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் அதைவிட மோசமாக, அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை.
நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு, மக்களுக்கு உடனடி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை.
இதே அரசியல்வாதிகளை வேறு வேறு துறைக்கு மாற்றி பணியமர்த்துவதால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை, இதனால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கப்பேவாதில்லை.
தெருவில் போராடி கொண்டிருப்பவர்கள் புதிய தலைமுறை இளைஞர்கள். கூடுதல் விழிப்புணர்வுடன், விவேகத்துடன், உறுதிப்பாடுடன் மற்றும் அச்சமற்ற ஒரு புதிய சமுதாயம் ஒன்றுபட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா டைம்ஸ் சதுக்கத்தில் பயங்கர வெடிப்பு.. உயிர் பயத்தில் தெறித்தோடிய மக்களின் வீடியோ
இலங்கை, இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனவாதம் மற்றும் மதப் பிளவு சமூகம் அல்லது அரசியலில் எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என தான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
ஊழலுக்கும், உறவுமுறைகளுக்கும், இலங்கை மக்களின் முதுகில் குடும்ப வம்சத்தை கட்டியெழுப்புவதற்கும் இடமளிக்கக் கூடாது எனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.