தன் குழந்தைக்கு ஆறுதல் கூற ஆவியாக வந்த தந்தை... கமெராவில் சிக்கிய காட்சி
தன் குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் உயிரிழந்த தந்தை ஒருவர், தனது குழந்தையை ஆறுதல் படுத்துவதற்காக ஆவியாக வருவதாக குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
குழந்தையின் தலையைத் தடவும் தந்தை
Whitney Allen என்ற பெண் டிக் டாக் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தனது குழந்தையைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள கமெராவில் சிக்கிய காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், குழந்தையின் தலையை யாரோ தடவுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
Image: Tiktok/whitneylynallen
எதிர்பாராமல் இறந்துபோன தந்தை
Whitney 12 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவரது மகனுடைய கழுத்துக்குப் பின்னால் பெரிய கட்டி ஒன்று இருப்பது தெரியவரவே அவர் மிகவும் கவலையடைந்துள்ளார். அப்போது Whitneyயின் கணவர் Ryan தங்கள் மகன் Leoவுக்கு எதுவும் ஆகாது என உறுதியாகக் கூறினாராம். குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், Ryan திடீரென இறந்துபோய்விட்டார்.
தன் உயிரைக் கொடுத்து தன் மகனைக் காப்பாற்ற Ryan உறுதியாக இருந்ததாக தற்போது கருதுகிறார் Whitney.
ஆக, தன் மகனைக் காண Ryan ஆவியாக வருவதாக கருதும் Whitney, அவர் தன் மகனை ஆறுதல் படுத்த அவனது தலையைத் தடவும் காட்சிதான் தான் கண்ட காட்சி என உறுதியாக நம்புகிறார்.
இணையத்தில் 8.5 மில்லியன் முறை பார்க்கப்பட்ட அந்த வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறது.
image: Tiktok/whitneylynallen