ஓடும் ரயிலில் இளம்பெண் முன் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர் கைது
இந்தியாவில் ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் இளம்பெண் எதிரே ஆபாசமாக நடந்து கொண்டதால் அவரை பொலிஸ் கைது செய்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ரேணுகா என்ற இளம்பெண் கடந்த 9ஆம் திகதி பணிக்கு சென்றுவிட்டு மின்சார ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டியில் அவருடன் மேலும் இரு பெண்கள் இருந்துள்ளனர். அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறி அமர்ந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அந்த நபர் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். இதைக் கண்ட பெண்கள் அதிர்ச்சியில் மூழ்கி போகினர்.
இதைத் தொடர்ந்து சட்டென்று தனது செல்போனை எடுத்த ரேணுகா, அந்த நபரை வீடியோ எடுத்தபடி சத்தம் போட ஆரம்பித்தார். இதனால் அந்த நபர் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட ரேணுகா தாம்பரம் ரயில்நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.