தன் ஐந்து பிள்ளைகளையும் கொலை செய்த தாய்: கருணைக்கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சோகக்கதை
ஐந்து பிள்ளைகளின் தாயாகிய ஒரு பெண், தன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன் ஐந்து பிள்ளைகளையும் ஒவ்வொருவராக கொலை செய்தார்.
தன் ஐந்து பிள்ளைகளையும் கொலை செய்த தாய்
பெல்ஜியம் நாட்டிலுள்ள Nivelles என்னுமிடத்தில் Bouchaib Moqadem என்பவரும், அவரது மனைவியாகிய Genevieve Lhermitte (56), மகள்கள் Yasmine (14), Nora (12), Myriam (10), Mina (7), மற்றும் மகன் Mehdi (3) ஆகியோர் வாழ்ந்துவந்தனர்.
2007ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி, தன் கணவர் வீட்டில் இல்லாதபோது, தன் பிள்ளைகள் ஒவ்வொருவரையாக கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் Genevieve.
அத்துடன், கத்தியின் மீது விழுந்து தற்கொலை செய்ய Genevieve முயல, காயம் உயிர் போகும் அளவுக்கு பலமாக இல்லாததால் அவசர உதவியை அழைக்கும் நிலை அவருக்கு உருவானது.
இந்த பயங்கர சம்பவத்தால் பெல்ஜியம் நாடே அதிர்ந்தது.
Credit: Rex
என்ன காரணம்?
Genevieveஇன் கணவரான Moqademஇன் குடும்ப நண்பர் Dr. Michel Schaar. இந்த Dr. Michelஐ தன் வளர்ப்புத்தந்தையாக கருதி, அவரது வீட்டிலேயேதான் வாழ்ந்துவந்துள்ளார் Moqadem.
Moqademக்கு திருமணமானதும், தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு Dr. Michel வீட்டுக்கு வந்து, அங்கேயேதான் தம்பதியர் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். Moqademக்கு சரியான வேலை இல்லாததால், Dr. Michelதான் குடும்பத்துக்கான பெரும்பாலான செலவுகளை செய்துள்ளார்.
Credit: Alamy
ஆனால், தன் குடும்ப வாழ்வில் Dr. Michel தலையிடுவது Genevieveக்கு பிடிக்கவில்லை. அது தன் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும் Moqadem தன் மனைவியையும் பிள்ளைகளையும் Dr. Michel வீட்டை விட்டு தனியாக கொண்டு செல்லவில்லை.
வெறுத்துப்போன Genevieve மனம் நொந்துபோயிருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் காதுக்குள் ஏதேதோ சத்தங்கள் கேட்கத் துவங்க, ஒரு நாள், தன் பிள்ளைகள் ஐந்து பேரையும் ஏமாற்றி, ஒருவர் பின் ஒருவராக கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டார்.
Credit: AFP
கருணைக்கொலை
பெல்ஜியம் நாட்டு சட்டப்படி, நீண்ட காலமாக மன வேதனையால் அவதியுறுவோர் கருணைக்கொலைக்கு கோரலாம்.
அவ்வகையில், தான் தன் பிள்ளைகளைக் கொலைச் செய்ததற்காக 16 ஆண்டுகள் மனம் நொந்து வாழ்ந்துவந்த Genevieve, தன்னைக் கருணைக்கொலை செய்யுமாறு கோரியுள்ளார்.
அவர் எந்த பிப்ரவரி 28 அன்று தன் பிள்ளைகளைக் கொலை செய்தாரோ, அதே பிப்ரவரி 28 அன்று, அதாவது, செவ்வாய்க்கிழமையன்று, அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்.
Credit: Rex
Credit: Getty