2023 ஜனவரி 1ஆம் திகதி பயணிகள் விமானம் ஒன்று மாயமாகும்: எச்சரிக்கும் நபர்...
தன்னை டைம் ட்ராவலர் என அழைத்துக்கொள்ளும் ஒருவர் சில மோசமான விடயங்கள் பூமியில் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவற்றில் ஒன்று, அடுத்த புத்தாண்டு தினத்தன்று பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் மாயமாகும் என்பதாகும்.
Eno Alaric என்னும் அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இந்த ஆண்டு, அதாவது 2022, நவம்பர் மாதம் 30ஆம் திகதி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பூமியைப்போலவே அச்சு அசலாகக் காணப்படும் கோள் ஒன்றைக் கண்டுபிடிக்கும் என்று கூறியுள்ளார்.
அடுத்து அவர் கூறியுள்ளது, சில்லிடவைக்கும் ஒரு விடயம். ஆம், 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி, பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் பகுதியின் மீது பறக்கும் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் மாயமாகும் என்று கூறியுள்ளார் Eno Alaric.
ஆனால், அந்த வீடியோவைப் பார்வையிட்ட அனைவரும் அவர் சொல்லியிருப்பதைக் கேட்டு பயந்ததுபோல தெரியவில்லை. அடுத்த முறை நீங்கள் டைம் ட்ராவல் செய்யும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள், சத்தியமாக நான் எதையும் தொடமாட்டேன் என கேலி செய்துள்ளார் ஒருவர்.
மற்றொருவரோ, நிறைய எழுத்துப்பிழை விடுகிறீர்கள், முதலில் கடந்தகாலத்துக்குச் சென்று அவைகளை சரி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்,