77 ஆண்டுகளுக்கு முன் சுடப்பட்ட நபர்: எக்ஸ்ரேயில் தெரிந்த அதிரவைத்த காட்சி
Zhao He (95) என்னும் சீன இராணுவ வீரர் ஒருவர், 77 ஆண்டுகளுக்கு முன் போரில் சுடப்பட்டுள்ளார், சமீபத்தில் அவருக்கு எக்ஸ்ரே ஒன்று எடுக்கவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.
கழுத்தில் துப்பாக்கி குண்டு
அப்போது எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி, காண்போரை அதிரவைத்தது. ஆம், Zhaoவின் கழுத்தில் துப்பாக்கிக் குண்டு ஒன்று இருக்கும் காட்சி அந்த எக்ஸ்ரேயில் தெரிந்தது.
இது குறித்து பேசிய Zhaoவின் மருமகனான Wang, தனது மாமா போரின்போது காயமடைந்த சக இராணுவ வீரர் ஒருவரைத் தூக்கிக்கொண்டு ஓடியதாகவும், அப்போது சரமாரியாக சுடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Image: ViralPress
உடலின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள்
அவரது உடலில் வேறு பல இடங்களிலும் இதேபோல் வெடித்துச் சிதறிய குண்டுகளின் பாகங்கள் இருப்பதாகவும் Wang தெரிவித்துள்ளார்.
தனது கழுத்தில் அந்த குண்டு இருந்ததே தனக்கு இத்தனை ஆண்டுகளாக தெரியாது என்று கூறும் Zhao, இதுவரை அது தனக்கு எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை என்கிறார்.
இதற்கிடையில், அவரது வயது காரணமாக, அந்த குண்டை எடுக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தாக முடியலாம் என்பதால், அதை அகற்றப்போவதில்லை என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
Image: ViralPress