ரஷ்யாவில் அவசர நிலை பிரகடனம்!
ரஷ்யாவில் காட்டுத்தீ பரவலை அடுத்து Krasnoyarsk நகரில் அவசர நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வன பாதுகாப்பு சேவை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி ரஷ்யாவில் 19,657 ஹெக்டேரில் 129 காட்டுத்தீ பதிவாகியுள்ளது.
காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளன. Krasnoyarsk நகரில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன, அங்கு 12,509 ஹெக்டேர் தீப்பிடித்துள்ளது.
ரஷ்யாவில் காட்டுத் தீயின் மொத்த பரப்பளவு கடந்த ஒரே நாளில் 4,500 ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
மேலும், காகாசியா குடியரசு (2,836 ஹெக்டேர்), இர்குட்ஸ்க் (2,009 ஹெக்டேர்) மற்றும் டியூமென் (1,443 ஹெக்டேர்) பகுதிகளிலும், டைவா குடியரசில் (1,390 ஹெக்டேர்) காடுகளின் பெரும்பாலான பகுதிகளும் தீப்பற்றி எரிகின்றன.
தீக்கிரையான ரஷ்யாவின் மிகப்பெரிய வணிக வளாகம்! வெளியான காணொளி
ரஷ்யாவின் 80 பிராந்தியங்களில் தீ ஆபத்து பருவம் தொடங்கியுள்ளது, குர்கன் பகுதி முழுவதும், கிராஸ்நோயார்ஸ்க் பிராந்தியத்தின் நான்கு மாவட்டங்களில், டைவா குடியரசின் ஒரு மாவட்டம் மற்றும் ககாசியாவின் இரண்டு மாவட்டங்களில் அவசரநிலை அறிமுகப்படுத்தப்பட்டது.
ரஷ்யாவின் 45 பிராந்தியங்களில் ஒரு சிறப்பு தீ நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என வன பாதுகாப்பு சேவை தெரிவித்தள்ளது.