ஆவியைத் திருமணம் செய்த பெண் வயிற்றில் குழந்தை?: வேண்டாம் என்கிறார் அவர்...
ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் தங்கள் திருமணத்தில் பிரச்சினைகள் உள்ளதாகக் கூறி மன நல ஆலோசகர்களை அணுக இருப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது அவருக்கு புதிய பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.
வயிற்றுக்குள் உதைக்கும் குழந்தை
பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde என்னும் பெண், நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.
தற்போது தனக்கு புதிய பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் Brocarde.
அதாவது, பயங்கரமாக அலறும் ஒரு குழந்தையின் குரல் கேட்டுத் தான் தூக்கத்திலிருந்து பதறி எழுவதாகவும், தனது படுக்கையின் கால்மாட்டில், ஆடும் தொட்டில் ஒன்றைத் தான் காண்பதாகவும் தெரிவித்துள்ளார் Brocarde.
பதறிச் சென்று தொட்டிலைப் பார்த்தால், அதற்குள் குழந்தை எதுவும் இல்லையாம். மேலும், அடிக்கடி வயிற்று வலியும், குழந்தை வயிற்றுக்குள் உதைப்பது போன்ற உணர்வும் தனக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார் Brocarde.
ஏற்கனவே ஒரு ஆவியால் தொல்லை அனுபவித்துவரும் தான், இன்னொரு ஆவிக்குழந்தையாலும் தொல்லை அனுபவிக்கத் தயாரில்லை என்கிறார் அவர்.