அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை வாடகை எடுத்து வாழும் இளம்பெண்.., ஏன் தெரியுமா?
சீனாவில் உள்ள இளம்பெண் ஒருவர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை வாடகை எடுத்து அதில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
வாடகைக்கு கழிப்பறை
சீனாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் பெண் ஒருவர் விசித்திரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அவரது முடிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
18 வயதான யாங், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். அவர் 50 யுவான் (ரூ. 588) வாடகை செலுத்தி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் வாழ்ந்து வருகிறார்.
இது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாடகையுடன் ஒப்பிடும்போது அவருக்கு இன்னும் மலிவு விலையில் உள்ளது. ஜுஜோவில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் யாங் வேலை செய்கிறார்.
அவரது மாத சம்பளம் 2,700 யுவான் (ரூ. 31,776). ஆனால், ஜூஜோவ் நகரில் ஒரு வீட்டின் வாடகை ரூ.9,500 முதல் ரூ.21,000 வரை உள்ளது.
மேலும், ஊதியத்தில் பாதியை அவரது பெற்றோருக்கு அனுப்புகிறார். இதனால் மற்ற செலவுகளையும் கருத்தில் கொண்டு கட்டுப்படியாகாது என்று நினைத்தார்.
பின்னர், கடை உரிமையாளரிடம் பேசி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை வாடகைக்கு தருமாறு கேட்டார். அந்த கழிப்பறை ஆறு சதுர மீட்டர் பரப்பளவை கொண்டது.
துணி துவைப்பது முதல் உணவு தயாரிப்பது வரை தனது அன்றாட வேலைகள் அனைத்தையும் யாங் அங்கேயே செய்கிறார். மேலும் அதை சுத்தமாக வைத்திருக்கிறார்.
கடை திறக்கப்படுவது முதல் மூடப்படும் வரை, ஊழியர்கள் மற்றும் நுகர்வோர் கழிப்பறையைப் பயன்படுத்த தனது பொருட்களை அந்த நேரத்தில் மட்டும் ஒதுக்கி வைக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |