நிலத்தகராறில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளைஞர்.., தெருநாய்களால் காப்பாற்றப்பட வினோதம்
நிலத்தகராறில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தெருநாய்களால் காப்பாற்றப்பட சம்பவம் நடைபெற்றுள்ளது.
இளைஞர் பிழைத்த அதிசயம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஆக்ராவில் 24 வயது இளைஞர் ரூப் கிஷோர் (24). இவர் கடந்த 18 -ம் திகதி ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தன்னை அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் ஆகிய 4 பேர் தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். அப்போது, கழுத்தை நெரித்ததில் கிஷோர் இறந்துவிட்டதாக நினைத்து அவர்களது பண்ணையில் புதைத்தனர்.
கிஷோரை புதைக்கப்பட்ட இடத்தில் சுற்றிய தெருநாய்கள் அப்பகுதியை தோண்ட ஆரம்பித்துள்ளது. அப்போது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளர்.
பின்னர், அதில் இருந்து வெளியில் வந்தார். அப்போது, அங்கிருந்த உள்ளூர் மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிஷோரின் தாய் பேசுகையில், எனது மகனை 4 பேர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட இளைஞர் தெருநாய்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |