வெட்டவெளியில் கைவிடப்பட்ட நிலையில் பயணிகள் விமானம்: அதன் மர்ம பின்னணி
தமது திட்டத்தை கைவிட்டதாகவும், விமானம் பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
அந்த விமானத்தை உணவு விடுதியாக வடிவமைக்கவும் அவர் திட்டமிட்டு வந்ததாக கூறுகின்றனர்.
பாலி நாட்டில் வெட்டவெளியில் போயிங் 737 விமானம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக காணப்பட்டு வருவது, தற்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
குறித்த மிகப்பெரிய பயணிகள் விமானமானது ராயா நுசா துவா செலாடன் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு சுண்ணாம்பு குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
@wejusttravel
தொழிலதிபர் ஒருவர் குறித்த விமானத்தை பல பாகங்களாக அப்பகுதிக்கு எடுத்துவந்து, முழு விமானமாக உருவாக்கினார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், அந்த விமானத்தை உணவு விடுதியாக வடிவமைக்கவும் அவர் திட்டமிட்டு வந்ததாக கூறுகின்றனர்.
ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக தமது திட்டத்தை கைவிட்டதாகவும், தற்போது அந்த விமானம் பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையிலேயே தற்போது அந்த விமானம் சுற்றுலாப் பயணிகளை அப்பகுதிக்கு ஈர்த்து வருகிறது.
@wejusttravel
இது மட்டுமின்றி, இன்னொரு பகுதியில் 2007ல் இருந்தே ஒரு விமானம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், அதுவும் உணவகமாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டதாகவும், பின்னர் தங்கும் விடுதியாக மாற்றும் திட்டமும் கைவிடப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில், இந்த விமானங்களின் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் திட்டம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.
@getty