பிரபல சீரியல் கில்லர் சோப்ராஜ் விடுதலை: ஆசைகாட்டி அழகிய இளம்பெண்களை கொலை செய்த பின்னணி
இளம்பெண்களை மயக்கி கொள்ளையடித்துவிட்டு அவர்களை கொலை செய்யும் சீரியல் கில்லரான சோப்ராஜ் இன்று விடுதலை செய்யப்படுகிறார்.
பிரான்ஸ் குடிமகன்
இந்திய தந்தைக்கும் தாய்லாந்து தாய்க்கும் பிறந்த சார்லஸ் சோப்ராஜ் (78), பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.
தாய்லாந்து, நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கொலை செய்யப்பட்ட 20 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கொலைகளுடன் தொடர்புடையவர் சோப்ராஜ்.
பார்க்க வசீகரமான தோற்றம் கொண்ட சோப்ராஜ், தனது அழகைப் பயன்படுத்தி பெண்களைக் கவர்ந்து, அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கி, கொள்ளையடித்துவிட்டு, அவர்களைக் கொன்றுவிடுவார்.
கொலை செய்யப்பட்டவர்களில் அமெரிக்க குடிமகளான Connie Jo Bronzich (29) மற்றும் கனேடிய குடிமகளான Laurent Carrière (26) ஆகியோரைக் கொலை செய்த குற்றங்களுக்காக தண்டனை பெற்றார் சோப்ராஜ்
2003ஆம் ஆண்டு நேபாளத்துக்கு திரும்பிய சோப்ராஜ், அங்கு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலை
நேற்று, வயது முதிர்ச்சியைக் காரணம் காட்டி சோப்ராஜை விடுதலை செய்ய நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று சோப்ராஜ் விடுதலை செய்யப்படுகிறார்.
சோப்ராஜால் கொல்லப்பட்ட இளம்பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அவர்கள் நீச்சல் உடையில் இருந்ததால் சோப்ராஜை நீச்சல் உடை கொலையாளி என்றும், சிறைகளில் இருந்து நைஸாக தப்புவதில் வல்லவர் என்பதால் பாம்பு கொலையாளி என்றும் அழைப்பதுண்டு.