புதைக்கப்பட்ட மரப்பெட்டியில் நடிகரின் சடலம் - தோண்டியெடுத்த பொலிஸார் அதிர்ச்சி
4 மாதங்களாக காணாமல் போன பிரேசில் நடிகர், புதைக்கப்பட்ட மரப்பெட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
புதைக்கப்பட்ட மரப்பெட்டியில் நடிகரின் சடலம்
பல மாதங்களாக காணாமல் போன பிரேசிலிய நடிகர் ஜெபர்சன் மச்சாடோ (Jefferson Machado), ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு வீட்டின் வெளியே மரப்பெட்டியில் இறந்து கிடந்ததது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது குடும்ப நண்பர் சின்டியா ஹில்சென்டேகர் நடிகரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "05/22/2023 அன்று ஜெஃப் உயிரற்ற நிலையில் காணப்பட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்," என்று அவர் எழுதியுள்ளார்.
NewsFlash
கைகள் கட்டப்பட்டு.,
44 வயது நடிகரின் சடலம் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மரப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவரது கைகள் தலைக்கு பின்னால் கட்டப்பட்டு, அவரது வீட்டில் இருக்கும் ஒரு மரப்பெட்டியைப் போலவே உள்ள ஒரு பெட்டியில் புதைக்கப்பட்டிருந்த்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைரேகையைப் பயன்படுத்தி சடலம் அடையாளம் காணப்பட்டதாகவும், கழுத்தில் கோடு இருந்ததாகவும், அது அவர் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
NewsFlash
பொலிஸார் விசாரணை
சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்த ஒருவரை பொலிஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். சந்தேக நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர் நடிகருக்கு நன்கு அறிந்தவராக கூறப்படுகிறது.
ஜெபர்சன் வீட்டில் அவரது எட்டு நாய்கள் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்க ஒரு அரசு சாரா அமைப்பு அவர்களைத் தொடர்பு கொண்ட பின்னர் நடிகரின் குடும்பத்தினர் அவர் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.
NewsFlash