நடிகர் விஜய் ஆகஸ்ட் 5 -ல் அடுத்த கூட்டம்! இது தான் காரணமா?
சென்னையில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்களுடன் ஆகஸ்ட் 5 ஆம் திகதி கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு வர ஆயத்தமாகும் விஜய்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வரும் விஜய், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
மேலும், நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியும், 234 தொகுதிகளிலும் ஏழைஎளிய மாணவர்கள் கல்வி பயில 'தளபதி விஜய் பயிலகம்' என்னும் இரவுநேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது.
ஆகஸ்ட் 5ல் கூட்டம்
நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதற்கு ஆயத்தங்கள் மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தை வலுவாக மாற்றுவதற்கு விஜய் ஈடுபட்டு வருகிறார். பனையூரில் உள்ள இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு பனையூரில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அப்போது, அரசியல் இயக்கத்திற்கான கட்டமைப்புகள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அண்மையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற நிகழ்வு இனி நடந்தால் அதை தடுக்கவும், எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றியும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |