அரசியலில் களமிறங்கும் விஜய்! பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனையா?
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறார் என்று கூறப்படும் நிலையில், அவர் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கு வர சிக்னல் கொடுக்கும் விஜய்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி சில மாதங்களாக இருந்து கொண்டு தான் இருக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வரும் விஜய், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
ஜூன் 17ஆம் திகதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த 1600 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் நின்று பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கினார். மேலும் விழாவில் பேசிய விஜய், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது.
இதனையடுத்து, ஜுலை 15ஆம் திகதி காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழைஎளிய மாணவர்கள் கல்வி பயில 'தளபதி விஜய் பயிலகம்' என்னும் இரவுநேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது.
பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை செய்தாரா விஜய்?
இந்நிலையில், அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் இரண்டாக பிரிந்துள்ள நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது ஆளுங்கட்சியான திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், விஜய் அரசியலுக்கு நுழைந்தால் ஓட்டுகள் பிரியும் நிலை ஏற்படும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
outlook india
அதுமட்டுமல்லாமல், தான் அரசியலுக்கு வந்தால் மக்களிடம் வெற்றி எப்படி இருக்கும் என்பதை அறிய ரகசிய சர்வே நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதில் 60 சதவீதம் விஜய்க்கு ஆதரவு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அரசியல் தலைவர்களான, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பிரஷாந்த் கிஷோர் நடிகர் விஜய்க்கும் வருங்காலத்தில் இருப்பாரா என்பதை விஜய் அரசியலுக்குள் வருவதை உறுதி செய்தால் மட்டுமே யூகிக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |