உலகிலேயே அழகான பெண் என வர்ணிக்கப்பட்ட பிரபல நடிகை மரணம்
திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்த நாட்களில், உலகிலேயே அழகான பெண் என வர்ணிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் நேற்று பிரான்சில் மரணமடைந்துள்ளார்.
உலகிலேயே அழகான பெண்
அவரது பெயர், கிளாடியா கார்டினேல் ( Claudia Cardinale, 87). இத்தாலி பெற்றொருக்கு துனிசியா நாட்டில் பிறந்தவரான கிளாடியா, The Pink Panther (1963), Once Upon A Time In the West (1968) ஆகிய புகழ் பெற்ற திரைப்படங்கள் உட்பட நூறுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
துனிசியா நாட்டில் பிறந்த கிளாடியா, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப்போட்டியில், ‘துனிசியாவிலேயே அழகான இத்தாலியப் பெண்’ என்னும் பரிசைப் பெற்றார்.
அந்தப் பரிசுடன் அவருக்கு இத்தாலிக்கு பயணிக்கும் ஒரு வாய்ப்பும் கிடைக்க, அங்கு அவரது அழகைக் கண்ட திரைப்படத் துறையினரால் கிளாடியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் துவங்கின.
இத்தாலியில் திரைப்படங்களில் நடித்த கிளாடியாவை ஹாலிவுட் இருகரம் நீட்டி வரவேற்க, கனவுக்கன்னியாக வலம் வந்தார் அவர்.
பின்னணியில் ஒரு இரகசியம்
தான் ஒரு ஆசிரியையாகவோ அல்லது உலகை சுற்றி வலம் வருபவராகவோதான் ஆவேன் என நம்பிக்கொண்டிருந்த கிளாடியாவை விதி திசை திருப்பிவிட்டது.
ஆம், மிக இளம் வயதில் கிளாடியாவை ஒருவர் வன்புணர, கர்ப்பமுற்றார் அவர். லண்டனில் ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்ட அவர், தனது மகனான பாட்ரிக்கை மற்றவர்களிடம் தன் தம்பி என அறிமுகம் செய்துவைத்தார்.
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்டால் அது மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்பட்ட அந்த காலகட்டத்தில், தன் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காகவே நடிப்புத் தொழிலை தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார் கிளாடியா.
கிளாடியாவுக்கு, பாட்ரிக்குடன், தன் கணவரும் திரைப்பட இயக்குநருமான Pasquale Squitieri மூலம் பிறந்த கிளாடியா என்னும் மகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று, அதாவது செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பிரான்சிலுள்ள Nemours, Île-de-France என்னுமிடத்தில் அமைந்துள்ள தனது வீட்டில், நடிகை கிளாடியா இயற்கை எய்தியதாக அவரது ஏஜண்டான Laurent Savry தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |