கூவத்தூர் விவகாரம்: திரிஷா மாதிரின்னு தான் சொன்னேன்.. பின்வாங்கிய அதிமுக முன்னாள் நிர்வாகி
கூவத்தூர் விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷா மீது குற்றச்சாட்டு சுமத்திய அதிமுக முன்னாள் நிர்வாகி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
திரிஷா பற்றி பேசியது..
சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.வி.ராஜூ. சில காரணங்களால் இவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்தார்.
WTF this Trisha should file legal
— Sekar ? (@itzSekar) February 20, 2024
action against him,nowdays these
guys are behaving very cheaply #Trisha | #TrishaKrishnan pic.twitter.com/Ip1ZClB8xS
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.வி.ராஜூ, ஜெயலலிதா இறந்ததற்கு பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்தது தொடர்பாக சில விடயங்களை பேசினார். அவர் பேசியது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர், கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களையும், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இவர் பேசிய கருத்துக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், நடிகர் சேரனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட ஏ.வி.ராஜூ
இந்நிலையில், திரிஷா தொடர்பாக பேசிய கருத்துக்கு அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ பின்வாங்கியுள்ளார். அவர், "நான் கூறியது தவறாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் சொன்னது திரிஷா மாதிரி என்று தான், திரிஷா என்று சொல்லவில்லை.
திரிஷா மாதிரி ஒரு சின்ன பெண் வேண்டும் என்று தான் வெங்கடாசலம் கேட்டார். நான் த்ரிஷா என்ற நடிகையைச் சொல்லவில்லை. அதனை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |